Pushpa 2

ஷாலினியும் சங்கீதாவும் திடீர் சந்திப்பு: அஜித், விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஷாலினியும் சங்கீதாவும் திடீரென சந்தித்து உரையாடிய நிகழ்வு ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்..

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டினார் தளபதி விஜய் என்பது தெரிந்ததே. விரைவில், தன்னுடைய இரண்டாவது மாநாட்டுக்கான பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார் விஜய்.

மேலும், தன்னுடைய மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படம் இயக்க உள்ள தகவல் கூட, அது பற்றிய அறிவிப்பு வந்த பிறகு தான் விஜய்க்கே தெரிய வந்ததாக செய்திகள் வெளியானது.

தன்னுடைய மகன் சினிமா துறையில் ஆர்வம் காட்டி வந்தாலும், அம்மா சங்கீதா தான், மகனின் ஆசையை பூர்த்தி செய்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஆசையை புரிந்து கொண்டு, அஜித்தின் மனைவி ஷாலினி உதவி செய்துள்ளார். அதாவது, அஜித்தின் மனைவியும் சங்கீதாவின் தோழியான ஷாலினி.

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது ஜேசன் சஞ்சயின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். அதேபோல், ஷாலினியின் பரிந்துரையின் பெயரில், லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து படு பிசியாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல், ஷாலினியின் சிபாரிசு காரணமாக தான், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சஞ்சய்க்கு செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வருகிறாராம்.

ஷாலினி – சங்கீதா இடையே பல வருடங்களாக இருந்து வரும் நட்பின் காரணமாக ஷாலினி இந்த உதவிகளை செய்துள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திடீரென சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. நட்பு ரீதியான இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசி கொண்டார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. என்றாலும், இவர்களின் நட்பு அஜித் – விஜய் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விஜய்யின் மகன் நடிக்கும் படத்தையும் ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்திருக்கின்றனர்.