‘அமரன்’ பட இயக்குனரை கண்டபடி திட்டினேன்: நெல்சன் திலீப்குமார் டென்ஷன்
‘அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை போன மாசம் வரைகூட கண்டபடி திட்டினேன்’ என இயக்குனர் நெல்சன் டென்ஷன் ஆகியுள்ளார். வைரலாகும் இவரது வாய்ஸ் குறித்த விவரம் காண்போம்..
அமரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் வசூல் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகள் என படக்குழு தெரிவித்தது.
அதேபோல், கவின் நடிப்பில் வெளியாகியுள்ள படமான ப்ளடி பெக்கர் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், அது படத்தின் வசூலில் ஓரளவுக்குத்தான் கைகொடுத்துள்ளது. படம் இதுவரை கிட்டத்தட்ட ரூபாய் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான முதல் படம்.
இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியைத் திட்டியதாக தானே கூறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில்,
எனக்கு ராஜ்குமார் பெரியசாமியை நீண்டகாலமாகத் தெரியும். என்னுடையை நீண்ட நாள் ஆசை, இயக்குநர் மணிரத்னம் சாருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான்.
ஒருமுறை மணிரத்னம் சார் விஜய் டிவிக்கு வந்திருந்தார். அப்போது நான் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன்.
என்னையும் அவரையும் ராஜ்குமார் பெரியசாமி தான் வைத்திருந்த செல்போனில் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தில் என்னைப் பார்த்தால் அவரைப்போலவும், அவரைப் பார்த்தால் என்னைப் போலவும் இருந்தோம்.
ஆனால், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்னவென்றால், மணி சாருடன் புகைப்படம் எடுத்துவிட்டேன் என்பதுதான். நான் ரொம்பவும் சந்தோஷத்தில் இருந்தேன்.
ஆனால் புகைப்படம் எடுத்த அடுத்த நாள், செல்போனைத் தொலைத்துவிட்டார். இதற்காக நான் அவரை கண்டபடி திட்டினேன்.
இன்னும் சொல்லப்போனால், போன மாதம் வரை திட்டினேன்’ என கூறுகின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
முக்கியமான புகைப்படம் தான். அதனாலென்ன, மறுபடியும் தக் லைஃப் விழாவில் பங்கேற்று எடுத்துக்கொள்ளலாம்.