‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் வேற லெவல்: வெளியான புதிய தகவல்
‘குட் பேட் அக்லி படத்தில் அஜித்தை வேற லெவலில் பார்க்கலாம்’ என படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் கூறிய தகவலால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்த அப்டேட் காண்போம்..
‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்திற்காக, ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடையும் முன்பே, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கி விட்டார் அஜித். அவரின் 63வது படமாக உருவாகி வருகிறது ‘குட் பேட் அக்லி’.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் ‘குட் பேட் அக்லி’ படத்தினை இயக்கி வருகிறார். இதனால், இப்படம் தரமான பேன் பாய் சம்பவமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் குட் பேட் அக்லியை தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷுட்டிங் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படம் குறித்து மரண மாஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது.. இப்படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், ‘குட் பேட் அக்லி’ பக்காவான கமர்ஷியல் படம்.
பில்லாவுக்கு பிறகு அஜித்தை வேறொரு ஸ்டைலில் பார்ப்பீர்கள் என தெரிவித்துள்ளார். இதனால் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்டாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வரிசையாக புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
கையில் டாட்டூவுடன் டி-சர்ட் அணிந்து சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில், கோட் சூட் அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில், சால்ட் அன்ட் பெப்பரில் இல்லாமல் டை அடித்து யங் லுக்கில் ஏகே இருப்பதை போன்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்தது.
இந்த போட்டோஸில் அஜித்தின் லுக் பில்லா வைப்பில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினர்.
இதனிடையில் ‘விடாமுயற்சி’ படத்தினை சீக்கிரமே திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். மகிழ் திருமேனி இயக்கியுள்ள
இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். ‘விடாமுயற்சி’ படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என கோலிவுட் தெரிவிக்கிறது.
10 பில்லா போல படம் தெறிக்கட்டும்.