Pushpa 2

‘கூலி’ படத்தில் அமீர்கானும் நடிக்கிறாரா?: இயக்குனர் லோகேஷ் சூசக தகவல்

மூன்று மொழிகளிலும் இருந்து பிரபல நடிகர்கள் கூலி படத்தில் நடித்து வர, தற்போது ஹிந்தியில் இருந்து அமீர்கானும் இணைகிறாரா? இது குறித்த விவரம் பார்ப்போம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீண்டும், ரஜினியுடன் சேர்ந்து நடித்து வருகிறார் சத்யராஜ். படத்தை அடுத்த ஆண்டு கோடை கால விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதுதான் கதை என சிறு குறிப்பு கூட கொடுக்க மாமாட்டார் லோகேஷ். அதனால் அவரிடம் இருந்து அப்டேட் வாங்குவது சாதாரண காரியம் இல்லை. இந்நிலையில் தான் கூலி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான் நடிப்பதாக தகவல் வெளியாகி வைரலாய் பரவியது.

இந்நிலையில் லோகேஷ், இதற்கு பதில் சொன்ன மாதிரியும் இருக்கட்டும், சொல்லாத மாதிரியும் இருக்கட்டும் என்பது போன்று பதில் அளித்திருக்கிறார்.

அதாவது அவர் தெரிவிக்கும்போது, ‘படத்தில் யார், யார் இருக்கிறார்கள் என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் தெரிவிக்க வேண்டும்.அதனால் நான் எதுவும் சொல்ல முடியாது. மீர்கான் நடிக்கிறார் என்றும் சொல்லவில்லை. அதே சமயம் அவர் நடிக்கவில்லை என்றும் சொல்லவில்லை. எனவே, கூலி படத்தில் ஆமீர் கான் நடிக்கிறார் என்றே ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள்.

முன்னதாக, 1995-ம் ஆண்டு ரிலீஸான Aatank Hi Aatank இந்தி படத்தில் ரஜினியும், அமீர்கானும் சேர்ந்து நடித்தார்கள்.

இந்நிலையில், கூலியில் அமீர்கான் இருக்கிறார் என்றால் 29 ஆண்டுகள் கழித்து அவர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகி வெச்ச குறி வெற்றியாகட்டும்.!