மேஜர் முகுந்த் வரதராஜனை தமிழராக மட்டுமே அடையாளம் காண்போம்: வைரலாகும் சில நிகழ்வுகள்..
இந்தியன் என்பதில்பெருமிதம் கொள்வோம். அதில், தமிழர் என்பதில் இன்னும் தலை நிமிர்ந்து ஆள்வோம்! ஆம், அமரன் திரைப்பட விஷயம் குறித்து நல்லன பார்ப்போம்.
தமிழ் நாட்டில், சென்னை தாம்பரத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைப் பதிவு தான் ‘அமரன்’ திரைப்படமாக
வெளிவந்து அனைவரின் பாராட்டும், வசூலும் பெற்றிருக்கிறது என்பதே தெரிந்ததே.
இந்த படத்தில், ஏன் முகுந்த் வரதராஜன் சாதி குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து, கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதுபோன்ற கேள்விகளுக்கு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பதில் அளித்துள்ளார். அது குறித்து காண்போம்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இதுவரை சுமார் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது. கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில்,
ஒரு தரப்பினர் ஏன் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் முகுந்த் வரதராஜன் என்கிற உண்மை படத்தில் மறைக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டமாக நடந்த விழாவில், கலந்து கொண்ட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இதற்கான விளக்கத்தை கொடுத்துளளார்.
முகுந்த் வரதராஜன் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ், ‘எங்களிடம் முகுந்த்தை எந்த ஒரு சாதி அடையாளமும் இல்லாமல், ஒரு தமிழராக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.
முகுந்த் வரதராஜனை முழுக்க முழுக்க தமிழ் சாயல் கொண்ட நடிகர் ஒருவரை மட்டுமே, பயன்படுத்துங்கள் என்று கேட்டு கொண்டது தான் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க காரணமாகவும் அமைந்தது என தெரிவித்தார்.
அதேபோல், முகுந்த் தன்னை எந்த ஒரு சாதி ரீதியாகவும் காட்டிக்கொள்ளாமல், இந்தியன் என்று தான் முன்னிலைப்படுத்தி உள்ளார் என்றும், அதனால் தான் அவரது சமூகம் குறித்த காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றும் கூறினார்.
எனவே, அவரை சாதி ரீதியாக பிரித்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு, சாதி ரீதியாக கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளது’ என்பது குறிப்பிடத்தக்கது.