இயக்குனர் லோகேஷ் அப்படி செய்ய மாட்டார்: நடிகர் சூர்யா ஸ்பீச்
பிரபஞ்சத்தில், யார் நல்லவன்? யார் கெட்டவன்? எனும் விவாதம் இன்றும் வைரலாய் விவாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சூர்யா நடிக்க, சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதற்காக, இந்தியா முழுவதும் சூறாவளியின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரமோஷன் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளார்.
அவ்வகையில், கேரளாவில் நடந்த கங்குவா திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் அவர் பங்கேற்றார்.
அப்போது ரசிகர் ஒருவர், உங்களுடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் தனியாக ஒரு கதையாக உருவாக இருக்கிறது. ஆனால், ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஒரு வில்லனாக காட்டாமல், அந்த கதாபாத்திரத்தின் நல்ல பகுதியை லோகேஷ் படமாக எடுப்பாரா? என்றார்.
அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே பதில் அளித்த சூர்யா, ‘நிச்சயம் அப்படி ஒரு விஷயத்தை லோகேஷ் கனகராஜ் செய்யமாட்டார். காரணம் ரோலக்ஸ் என்றாலே கெட்டவன் தான். ஆகையால், அந்த கதாபாத்திரத்தின் நல்ல பகுதி எடுக்கப்பட வாய்ப்புகள் இல்லை’ என்றார்.
உலகில்.. சோதனை சூழ்ந்தாலும் இறுதியில் நல்லவன் தானே வெல்வான்.!