இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

திரையரங்குகளில் நாளை சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபு நடித்த ‘ஜோரா கைய தட்டுங்க’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியிலும் சில திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துப் பார்ப்போம்..
கேங்கர்ஸ்: சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, வாணி போஜன், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள படம் கேங்கர்ஸ். குஷ்பூ தயாரித்து இருந்தார். இப்படம் இன்று15-ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
நேசிப்பாயா: பில்லா, ஆரம்பம், சர்வம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது இயக்கியுள்ள படம் நேசிப்பாயா.
இப்படத்தில் ஆகாஷ் முரளியும், அதிதி ஷங்கரும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இப்படம் நாளை 16-ந்தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தி டோர்: அஜித், ரவி மோகன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பாவனா. இவர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‘தி டோர்’. இப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இந்நிலையில், தற்போது சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் மே 16-ந்தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
க.மு-க.பி: புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் க.மு – க.பி (கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்கு பின்).
அதாவது கல்யாணத்துக்கு முன், பின் காதலர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை, எதார்த்தமாக சொல்லும் படம். ஹீரோயினாக சரண்யா, ஹீரோவாக விக்னேஷ் ரவி நடித்துள்ளனர். இப்படம் நாளை 16-ந்தேதி முதல் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது.
மனமே: ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் சர்வானந்த் நாயகனாக நடித்துள்ள படம் மனமே. இப்படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படமும் 16-ந்தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மேலும், மலையாளத்தில் பேசில் ஜோசப் நடித்த மரண மாஸ் திரைப்படம் சோனி லிவ் தளத்தில் இன்று ரிலீஸானது.
அதேபோல் தெலுங்கில் ‘அனகநாகா’ என்கிற திரைப்படம் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. இதுதவிர, இந்தியில் Bhool Chuk Maaf என்கிற இந்தி படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், HaiJunoon என்கிற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நாளை 16-ந்தேதி வெளியாகிறது.
