The budget of Thalapathy 68 was cut by Thalapathy 69, do you know how many crores
The budget of Thalapathy 68 was cut by Thalapathy 69, do you know how many crores

தளபதி 69 படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் சினேகா ,பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு ,லைலா, விடிவி கணேஷ், மீனாட்சி சவுத்ரி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பதை இந்த படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாபெரும் ஹிட் கொடுத்த கோட் 300 கோடியை தாண்டி வசூலில் மிரட்டி வருகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தின் பட்ஜெட் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இந்தப் படத்தின் பட்ஜெட் 450-ல் இருந்து 500 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.