நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா 44 படத்தில் நடிக்க உள்ளார் பிரபல நடிகை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூர்யா 44 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க,சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே,ஜெயராம் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன.படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கான லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நந்திதா தாஸ் சூர்யா 44 படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.