பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரலாறு பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.
இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே மகாநதி சீரியலில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில் திவ்யா கணேஷ் தனது முப்பதாவது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளார். அவருக்கு அவரே வாழ்த்து சொல்லும் மாறு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.