‘நீ நதி போல ஓடிக்கொண்டிரு, எந்த வேர்வைக்கும் வேற்றிகள் ‘வேர்’ வைக்குமே’ என்பது போல, தளபதி விஜய் மிக பரபரப்பாய் இருக்கிறார். விஜய், ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த சூழலில் தான் கடந்த 1994-ம் ஆண்டு அவருடைய நடிப்பில் வெளியான “ரசிகன்” என்கின்ற திரைப்படத்தில், முதல் முறையாக “இளைய தளபதி” என்கின்ற தலைப்புடன் அவருடைய பெயர் டைட்டில் கார்டில் வெளியானது.
ஒரு ஹீரோவாக நடிக்க தொடங்கும் பொழுது, தன்னுடைய கதாபாத்திரம் அனைத்து விதத்திலும், வெற்றி பெறும் விதமாக உள்ள கதைகளைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் நடிகர்கள் .
ஆனால், இளம் வயதிலேயே “பூவே உனக்காக” போன்ற திரைப்படத்தில் அனைத்தையும் விட்டுக் கொடுக்கும் ஹீரோவாக, “நேருக்கு நேர்” போன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்று, கதையை மட்டுமே கவனத்தில் கொண்டு படங்களில் நடிக்க துவங்கினார் விஜய். நடிப்பு, நடனம், பாடல் மற்றும் ஆக்சன் என அனைத்தும் சேர்ந்த ஒரு ஹீரோவாக வலம் வந்தார். பின்னர், தளபதி என்ற செல்லப் பேருக்கும் சொந்தக்காரர் ஆனார்.
உண்மையில், தளபதி என்ற பட்டம் அவருக்கு வந்த பிறகு தான், பெரிய அளவில் அவர் அரசியல் ரீதியான படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ஏ.எல் விஜய்யின் “தலைவா”, 2017-ம் ஆண்டு மூன்று வேடங்களில் விஜய் அசத்திய “மெர்சல்”, அதைத் தொடர்ந்து வெளியான “சர்க்கார்” உள்ளிட்ட திரைப்படங்களில் பெரிய அளவில் தன்னுடைய அரசியல் முன்னெடுப்பு குறித்து பேசி இருந்தார் விஜய்.
இந்த சூழலில், பலரும் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியானது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற தனது அரசியல் கட்சியினை மக்களுக்கு அறிவித்தார் விஜய். ஆனால், அவர் அந்த அறிவிப்போடு நிறுத்தியிருந்தால் கூட அவர் மேல் தனி மரியாதையை அவர் ரசிகர்களுக்கு வந்திருக்காது. ஆனால், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு பட பணிகளை முடித்துவிட்டு, சினிமாவில் இருந்தே விலகப் போகிறேன் என்று அறிவித்தது தான் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, உலக நாயகன் கமல்ஹாசனுக்கு எழுதிய ஒரு அரசியல் சார்ந்த கதையை தான், இப்போது விஜய்க்கு, வினோத் பயன்படுத்த உள்ளதாகவும் சில தகவல்கள் நம்பத் தகுந்த ஆதாரங்கள் கூறுகின்றன.
இந்த செப்டம்பர் மாத இறுதியில், விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை தளபதி விஜய் நடத்த உள்ள நிலையில், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தனது 69-வது திரைப்பட பணிகளை அவர் துவங்குவார் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ள நிலையில், விரைவில் அந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளது.
காலம் மாறும்; காட்சியும் மாறும் தானே.. வெயிட்டிங்.