புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் அஜித்குமார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ஆனால் இந்த படம் குறித்த ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் வெள்ளை நிறத்தில் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அஜித் குமார் அந்த காருடன் இருக்கும் புகைப்படத்தை அவருடைய மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில்,”he’s got the car,the style and my heart ❤️ என பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.