ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கி ஹீரோ தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் ரசிகருக்காக ஒரு விஷயம் செய்துள்ளார்.
அதாவது ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். குழந்தையின் பெற்றோர்கள் ஏற்கனவே நைனிதா கிருஷ்ணன் என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்ததால் குழந்தையின் காதில் மூன்று முறை பெயரை சொல்லி உள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் குழந்தையை வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் பலரும் க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.