பழிவாங்கணும்னு இருந்தா என்ன பழிவாங்குங்க.. விஜய் வெளியிட்ட வீடியோ.!!

Web Ads

பழி வாங்கணும்னு இருந்தா என்ன பழிவாங்குங்க என்று வீடியோ வெளியிட்டு உள்ளார் விஜய்.

thalapathy vijay latest video viral
thalapathy vijay latest video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். தற்போது கட்சிக்கான பிரச்சாரத்தை மாவட்டம் வாரியாக சந்தித்து வரும் விஜய் சனிக்கிழமை அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயி*ழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. சிலர் விஜயை விமர்சித்தும் சிலர் ஆதரவாக பேசியும் பதிவிட்டு வருகின்றனர்.

Web Ad 2

இந்த நிலையில் தற்போது விஜய் வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

சிஎம் சார் என்ன பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என் வீட்டிலோ இல்லை அலுவலகத்தில் தான் இருப்பேன் என்ன என்ன வேணும்னாலும் பண்ணுங்க என்று கூறியுள்ளார். இது மட்டும் இல்லாமல் கரூர் சென்று கூடிய விரைவில் மக்களை சந்திக்கிறேன் என்றும் மக்களின் மீது வைத்துள்ள அன்புக்கும் பாசத்திற்கும் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் எனது வாழ்க்கையில் இது போன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்ததில்லை என பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.