Vijay 64 First Look
டெல்லியில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கை அடுத்து தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு எங்கே நடக்கும் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது டெல்லியில் படமாகி வருகின்றன.

இன்னும் சில தினங்களில் டெல்லியில் ஷூட்டிங் நிறைவடைய உள்ளதாம், இதனையடுத்து படக்குழு மும்பை பறக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மும்மையில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் வில்லன்களாக நடிக்க உள்ள விஜய் சேதுபதியும் ஆண்டனி வர்கீஸும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் புத்தாண்டு அன்று வெளியாகும் எனவும் படத்திற்கு டாக்டர் என டைட்டில் வைக்க ஆலோசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.