பீஸ்ட் படத்தை முடித்த தளபதி விஜய் அடுத்ததாக விஜய் அறுபத்தி ஆறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றித் தெரிய வந்துள்ளது.

Thalapathy 66 Movie Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதலில் பூஜா ஹெக்டே தனக்கான பகுதிகளை நடித்து முடித்தார். அவரைத் தொடர்ந்து தளபதி விஜய் சமீபத்தில் தான் தனக்கான ஷூட்டிங்கை மொத்தமாக நிறைவு செய்தார்.

இதனை புகைப்படமாக வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

Thenkachi Swaminathan Speech | தென்கச்சி கோ சுவாமிநாதனின் 25 கதைகள் 25 சிந்தனைகள் | இன்று ஒரு தகவல்

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.