Thalapathy 63 Updates

Thalapathy 63 Updates : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

துப்பாக்கி முனையில் தேசிய நெடுஞ்சாலையில் நிஜ ஆக்‌ஷன் , அலட்டிக்காத ஹீரோ..!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதேபோல் இப்படத்தின் பட்ஜெட் சொன்னதை விட பலமடங்கு உயர்ந்திருப்பதாகவும் இதனால் அட்லிக்கும் தயாரிப்பு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாகவும் நாம் சொல்லியிருந்தோம்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் தற்போது நடிகர் விஜய் தலையிட்டுள்ளாராம்.

விஜய்யிடம் இதுகுறித்து விளக்கமளித்த அட்லி, கணக்கு எல்லாம் சரியாக உள்ளதுண்ணா..

வேண்டுமானால் ஆடிட்டரை வைத்து கூட பார்க்க சொல்லுங்கள் என பணிந்துவிட்டாராம். விஜய்யும் அட்லியின் வார்த்தையை ஒப்புகொண்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.