நடிகர் அஜித் குமாரின் தந்தையின் மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய விஜய் தற்போது நடிகர் அஜித்குமாரின் தந்தையின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று நேற்றைய தினம் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://twitter.com/KishoreNC_/status/1639236134256648197?t=zKu9VAsiL1SQwKDBrYg-3Q&s=19