தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Thalapathi 66 movie first shooting spot photo: 

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இதில் சரத்குமார், பிரபு, போன்ற பல்வேறு பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான தகவல்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும்  இருக்கின்றனர். இந்த புகைப்படம் விஜய் ரசிகர்களின் இடையே உற்சாகத்தோடு வைரலாகி வருகிறது.