Thala Ajith upcoming movie heroine update

தல அஜித்தின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Thala Ajith upcoming movie heroine update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வினோத் இயக்கத்திலும் போனிகபூர் தயாரிப்பிலும் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடத்திற்கு மேலாகியும் படக்குழு எந்த ஒரு அப்டேட் வெளியிடவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இப்படியான நிலையில் அஜித் ரசிகர்கள் உற்சாகமடையும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

தல அஜித்தின் அடுத்த படத்தில் நயன்தாரா ஹீரோயினியாக நடிக்கப்போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.