valimai

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மெகா ஸ்டாருமான தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியுடன் தல 60 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டைட்டில் ‘வலிமை’ என வைக்கலாம் என தகவல் ஒன்று கசிந்தது. ‘வலிமை’ என்ற டைட்டில் நிச்சயம் அஜித்திற்கு பொருத்தமான தலைப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

valimai2

இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அது தொடர்பாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதன்படி இப்படத்திற்கு வலிமை என்ற பெயரையே படக்குழு தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது.

இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இப்படத்தின் தலைப்பு ‘வலிமை’ என்பது உறுதியாகியுள்ளது.