Thala 59 Secrets

Thala 59 Secrets :

பிங்க் படத்தின் ரி-மேக் தான், ஆனாலும் தல 59 படம் எப்படி இருக்கும் என்பதை பற்றி படத்தை தயாரிக்க உள்ள போனி கபூர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் தீரன், சதுரங்க வேட்டை பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாக பிங்க் படத்தின் ரீமேக்கான தல 59 படத்தில் நடிக்க உள்ளார்.

பிங்க் படத்தின் ரீமேக் என்பதால் இப்படத்தில் பெரியதாக மாஸான காட்சிகள் எதுவும் இருக்காது என்பது ரசிகர்களின் மிக பெரிய வருத்தமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது போனி கபூர் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் தான் வினோத்தை மும்பைக்கு அனுப்பி என்னிடம் கதை கூற சொல்லி இருந்தார்.

வினோத் அவர்கள் என்னிடம் கதை சொன்ன விதமே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த படம் பிங்க் படத்தின் ரிமேக் தான் என்றாலும் முழுக்க முழுக்க அப்படியே இருக்காது.

படம் தமிழ் சினிமா பாணியில் அதுவும் வினோத்தின் கை வண்ணத்தில் மாஸான திரைக்கதையில் உருவாகும் என கூறியுள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.