Teddy Movie Record in OTT

படம் ரிலீஸாகி 50 நாட்களாகிய நிலையில் திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Teddy Movie Record in OTT : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று டெடி. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியானது.

படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிறுவர்கள் மத்தியில் டெடி திரைப்படம் கொண்டாடப்படும் படமாக அமைந்தது. தற்போது இந்த படம் வெளியாகி 50 நாட்கள் முடிவடைந்துள்ளன.

ரிலீஸாகி 50 நாள்.. புதிய சாதனை படைத்த டெடி‌ - வெளியான வீடியோ

50 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து இருப்பதாக ஹாட் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது தற்போது வரை OTT-யில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக டெடி திரைப்படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.