Tamannaah Funny Answer to Reporter Questions about Her Marriage
Tamannaah Funny Answer to Reporter Questions about Her Marriage

தமன்னாவுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு வெட்கப்பட்டு பதில் அளித்துள்ளார் நடிகர் விஜய் வர்மா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் இருவரும் கடந்த புத்தாண்டு தினத்தில் லிப் லாக் கிஸ் கொடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலானது. அதிலிருந்து இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது பற்றிய கேள்விக்கு தமன்னா நாங்க இருவரும் ஒரு படத்தின் இணைந்து நடிக்கிறோம் இப்போதைக்கு அது மட்டும் தான் சொல்ல முடியும் என பதிலளித்தார்.

இந்த நிலையில் விஜய் வர்மா விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நிருபர் ஒருவர் சுப செய்தி ஏதாவது இருக்கா என கேள்வி எழுப்ப தமன்னா பற்றிய கேள்விதான் இது என்பதை புரிந்து கொண்ட விஜய் வெக்கப்பட்டு முகம் சிவந்து பதில் அளித்துள்ளார்.

அதாவது சீக்கிரமே நல்ல படத்தை கொடுக்க முயற்சி செய்கிறேன் என சொல்லி எஸ்கேப் ஆகி உள்ளார். இதனால் இவருக்கும் தமன்னாவுக்குமான காதல் 100 சதவீதம் உண்மைதான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.