Syed Modi International - Sameer Verma Champion
Syed Modi International - Sameer Verma Champion

Syed Modi International – Sameer Verma Champion – சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் சமீர் வர்மா நேற்று மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றார்.

உ.பி -யில் நேற்று நடந்து முடிந்த சையது மோடி பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றில்,

இந்திய வீரர் மற்றும் உலகின் 16-வது இடத்தில் உள்ள சமீர் வர்மா 16-21,21-19, 21-14 என்ற செட் கணக்கில் சீன வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

சாய்னா தோல்வி : அதனை தொடர்ந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாய்னா தோல்வியை தழுவினார்.

இறுதி போட்டியில் சீன வீராங்கனை யங் ஹான் யூவை எதிர் கொண்ட சாய்னா, 18-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார்.

மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாத்விக்சாய்ராஜ்-சிரக் ஷெட்டி, பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா-சிக்கி ஜோடிகள் தோல்வியை கண்டனர்.