சூர்யாவின் ‘சிக்ஸ் பேக்’ பற்றி சிவகுமார் சர்ச்சை பேச்சு: திரை வட்டார பரபரப்பு..

Web Ads

சிக்ஸ் பேக் பற்றி சூர்யா பெரிய விஷயமாக பேசியதில்லை. ஆனால், சிவகுமார் பேசியதுதான் தர்க்கமாகி விட்டது. இது பற்றிய விவரம் காண்போம்..

‘ரெட்ரோ’ பட இசை வெளியீட்டு விழாவில், சிவகுமார் பேசியது சர்ச்சையாகி விட்டது. அதாவது ‘தமிழ் சினிமாவில், தன் மகன் சூர்யாவுக்கு முன்பும், பின்பும் சிக்ஸ் பேக் வைத்தவர் யாரும் இல்லை’ என்றார்.

இதையடுத்து, ஆளாளுக்கு ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். சூர்யாவுக்கு முன்பே சிக்ஸ் பேக் வைத்தார் அர்ஜுன், தனுஷ் என அவர்களின் ரசிகர்கள் தெரிவித்தார்கள். சூர்யாவுக்கு பிறகும் பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்தார்கள். சூரியும் சிக்ஸ் பேக் வைத்ததை மறக்க வேண்டாம்’ என திரை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தன் கணவர் ரியாஸ்கான் தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என இன்ஸ்டாவில் மீம் ஒன்றை போஸ்ட் செய்தார் உமா.

‘வாரணம் ஆயிரம்’ படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்த போதிலும், அது ஆரோக்கியமானது இல்லை என அனைவரிடமும் சொல்லி வருகிறார் சூர்யா. தான் சிக்ஸ் பேக் வைத்ததை என்றுமே பெரிய விஷயமாக அவர் பேசியதே இல்லை. இந்நிலையில், சிவகுமார் பேசியதற்கு சூர்யாவை விமர்சிக்கிறார்கள்.

முன்னதாக, சிக்ஸ் பேக் பற்றி ரவி மோகன் தெரிவிக்கையில், ‘எங்க அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது முடியாத காரியம். அப்பா ஒரு எடிட்டர் என்பதால், கெட்டதை முதலில் தூக்கிப் போடுவது தான் என் வேலை என்பார். கெட்டதை எல்லாம் தூக்கிப் போட்டால் நல்லது வந்துவிடும் என்பார். கெட்டதை மட்டும் தான் சொல்வேன். நீ பண்ற தப்ப மட்டும் தான் சொல்வேன்’ என்பார். அதையும் மீறி பேராண்மை பார்த்துவிட்டு ஹக் செய்தார். அது தான் முதல் முறை. அது மறக்க முடியாத நாள்.

பேராண்மை என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அந்த படத்திற்காக சிக்ஸ் பேக் பண்ணுவோம். தென்னிந்தியாவில் யாருமே பண்ணல. சிக்ஸ் பேக் பண்ணிக் காட்டுவோம்னு ஆரம்பித்தால், படம் முடியும் நிலையில் இருந்தபோது சூர்யா சார் வந்து சிக்ஸ் பேக்கை காட்டி நிற்கிறார்.

அதை பார்த்த நானோ, இது எப்பய்யா நடந்துச்சு, சொல்லவே இல்லைனு நினைத்தேன். அடுத்து விஷால் வந்து சிக்ஸ் பேக்குடன் நிற்கிறார். இனிமேல் நாம் சிக்ஸ் பேக் வைத்தால் அசிங்கமாக இருக்கும். வேண்டாம்னு முடிவு செய்தேன்’ என்றார். மேலும், இது குறித்து இணையவாசிகள் திரைக்கு பின்னால் ஸ்டண்ட் மாஸ்டர்கள் உள்பட சிக்ஸ் பேக் வைத்தவர்கள் அதிகம் உள்ளனர் சிவகுமார் சார் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

suriya six pack issue is still the talk of social media
suriya six pack issue is still the talk of social media