விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..ஜனநாயகன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

Web Ads

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

jananayagan movie latest update viral

jananayagan movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

H.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வருகிற ஜூன் மாதம் 22ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று படத்தின் ப்ரோமோ டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

jananayagan movie latest update viral

jananayagan movie latest update viral