வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகிறது ‘வாடிவாசல்’: இதோ அப்டேட்ஸ்..
வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் ‘வாடிவாசல்’ படம் குறித்த அப்டேட் பார்ப்போம்..
தமிழர்களின் பண்பாட்டை உரத்துப் பேசும் ‘வாடிவாசல்’ படத்தில், மீண்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணைவது உறுதியாகி உள்ளது.
‘வாடிவாசல்’ திரைப்படத்தை உறுதி செய்வது போல், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை, சூர்யா மற்றும் வெற்றிமாறன் சந்தித்த புகைப்படங்கள் இணையமெங்கும் வைரலாகி வருகின்றன.
கடந்த 1958-ம் ஆண்டு, சி.எஸ்.செல்லப்பா எழுதிய நாவலை தழுவி ‘வாடிவாசல்’ திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. அதேபோல், இப்படத்தில் ஜல்லிக்கட்டின் பழமையான பாரம்பரியத்தை வெற்றிமாறன் காட்சிப்படுத்த உள்ளார்.
இந்த படத்திற்காக, சூர்யா நிஜமான ஜல்லிக்கட்டு காளையுடன் பயிற்சி பெற்ற நிலையில், மீண்டும் இப்படத்திற்கான பணியில் தீவிரமாக இறங்குகிறார்.
தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் மனிதர்களுக்கும் காளைக்கும் இடையேயான அழகான தொடர்பை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட உள்ளது.
தற்போது சூர்யா, இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘பேட்டைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட் நிறைவு பெற்றதும் வாடிவாசலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
