
ஜெயிலர்-2 டீசரில் ரஜினியின் மிரட்டலான என்ட்ரி; தற்போதைய டிரெண்டிங்கில் முதலிடம்..
சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 பட டீசரின் ஆக்சன் அவதாரம் பற்றிப் பார்ப்போம்..
ரஜினிகாந்த் நடித்து நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூலை குவித்து சாதனை படைத்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, 2- பாகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்திற்கான புரோமோ வீடியோ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. வீடியோவில்…
‘பெஞ்சல் புயலைப் பற்றி கோவாவில் அறையொன்றில் அமர்ந்து இயக்குனர் நெல்சனும் இசையமைப்பாளர் அனிருத்தும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, திடீரென அறைக்குள் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. அனைவரையும் போட்டுத்தள்ளி விட்டு செம மிரட்டலாய் என்ட்ரி கொடுக்கிறார் ரஜினி.
டயலாக் எதுவும் இல்லாமல் ஸ்டைலான நடையில், ஆக்ரோஷ பார்வையில்.. என மாஸ் காட்டியுள்ளார் ரஜினி. ‘ஜெயிலர்’ பாணியில் ஆக்சனுடனும், ஹுயூமரும் கலந்து டீசரை தெறிக்க விட்டுள்ளார் நெல்சன் திலீப்குமார்.
இந்நிலையில் நேற்று மாலை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ புரோமோ வேறலெவல் வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இந்த டீசர் டிரெண்டிங்கில் முதலிடத்தை கலக்கி வருவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நீண்ட காலமாக இப்படத்தின் அறிவிப்பிறகாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பொங்கல் விருந்தாக வெளியாகி வைரலாய் கலக்கி வருகிறது ‘ஜெயிலர் 2’ புரோமோ.
இதனையடுத்து, ‘தலைவர் வந்தாலே ரெக்கார்ட் தான்’ என இணையத்தில் மாஸான கமெண்ட்களை குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
ரஜினி தற்போது ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஷுட் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
பல மொழிகளில் புகழ் புகழ் பெற்ற பிரபல நடிகர்கள் நடிந்து வரும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இப்படம் 1000 கோடி வசூலிக்கும் எனவும் கோலிவுட் நம்பிக்கை வட்டாரம் தெரிவிக்கிறது.
