‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்கதை குறித்து, இயக்குனர் அப்டேட்ஸ்..

‘விடாமுயற்சி’ பட கதைக்களம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி கூறியவற்றை காண்போம்..

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல், முதல் சிங்கிளும் வெளியாகி செம ரெஸ்பான்ஸை பெற்றது.

இப் படமானது ‘பிரேக் டவுன்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல் ஆகும். முறையாக அனுமதி வாங்காததால் நஷ்ட ஈடு கேட்டது பிரேக் டவுன் படக்குழு. பின்னர், இப்பிரச்சினை சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படம் பிப்ரவரி முதல் வாரம் ரிலீஸாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ‘தல’ ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இச்சூழலில், மகிழ் திருமேனி ‘விடாமுயற்சி’ படத்தின் கதை குறித்து, ‘ஒரு மனிதனுடைய சோர்வடையாத தொடர் முயற்சிதான் இந்தப் படம்.

அஜித்துடைய கேரக்டருக்கு இந்தப் படத்தில் சின்ன சின்ன லேயர்ஸ்கள் இருக்கின்றன. படத்தின் கதைக் கருவுடன் உறவுகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமும் இருக்கிறது. அனைத்தையுமே ஒருசேர காப்பாற்றுவதற்காக, ஒரு மனிதன் நடத்தக்கூடிய விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை’ என்றார். முயற்சி திருவினையாகட்டும்.!

magizh thirumeni talks about vidaamuyarchi movie story
magizh thirumeni talks about vidaamuyarchi movie story