
எங்களுக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது: நடிகை பூர்ணிமா ஃபீலிங்ஸ்..
கே.பாக்யராஜின் மனைவி நடிகை பூர்ணிமா கூறிய துயர வார்த்தைகள் அறிவோம்.
‘திரைக்கதை மன்னர்’ இயக்குனர் கே.பாக்யராஜின் முதல் மனைவி உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். அதனையடுத்து, நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.
சாந்தனு, தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யா அப்பா(கே.பாக்யராஜ்) இயக்கிய ‘பாரிஜாதம்’ படத்தில் மட்டும் நடித்திருந்தார். பின்னர், காதல் திருமணம் செய்து, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார்.
இந்நிலையில், பூர்ணிமா தங்களது வாழ்க்கையை பற்றி மனம் திறந்து கூறியதாவது, ‘எங்களுக்கு கஷ்டமே வந்ததில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு வந்த கஷ்டம் மாதிரி வேறு யாருக்கும் வந்துவிடவே கூடாது என்றுதான் நான் எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில், இந்த சினிமா துறை என்பது அப்படிப்பட்டது.
அந்த கஷ்டம் வந்தபோது நாங்கள் நினைத்தது ஒன்றுதான். அதாவது ஒரு குடும்பமாக இதனை கடந்துவிட வேண்டும் என்று நினைத்தோம். கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை. நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பது எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
திருமணம் ஆன புதிதில் பெரியவர்கள் உடன் இருந்தால், சின்ன சின்ன விஷயங்களை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்று சொல்லித் தருவார்கள். பெரியவர்கள் கூட இருப்பது ரொம்பவே அவசியமான ஒன்று’ என்றார்.
சாமான்யர்களுக்கு வரும் கஷ்டம் வேறு, பிரபலங்களுக்கு வரும் வேறுதானே.! அவ்வகையில் பூர்ணிமா தாங்கள் அனுபவித்த வாழ்வியல் துயரத்தை முழுவதுமாய் கூறவில்லை. தற்போது அவர் கூறிய இந்த துன்பக்கூற்று இணையவெளியில் வைரலாகி வருகிறது.
