நான் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தது: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்பீச்
தமிழ் சினிமாவில், ‘பாட்ஷா’ திரைப்படம் செம எனர்ஜி மூவி என்பதை ரசிகர்கள் அனைவரும் அறிவர். தற்போது, இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஸ்பீச் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாமலை, பாட்ஷா, வீரா, பாபா என பல படங்களை இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அவர் இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா திரைப்படங்கள் இன்றும் கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றன.
இந்நிலையில், சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து, ரஜினி கதை கேட்டிருக்கிறார். இது குறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், ‘ரஜினி சார் என்னை அழைத்து கதை கேட்டார். நானும் ஒரு சில கதைகளை சொன்னேன். நான் மட்டுமல்லாமல், கார்த்திக் சுப்புராஜும் ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறார்.
நாங்கள் இருவரும் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்தது. ஆனால், ரஜினி தற்போது கூலி, ஜெயிலர்-2 படப் பணிகளில் இருக்கிறார். இருப்பினும், எதிர்காலத்தில் நல்ல விஷயம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ரஜினி ‘கூலி’ படத்தில் நடித்து முடித்து விட்டு, அடுத்ததாக ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கிறார். அதன் பிறகும் ரஜினி தொடர்ந்து படங்களில் நடிப்பதாகவே முடிவெடுத்திருக்கிறார்.
இச்சூழலில், ‘ஜெயிலர்-2’ படத்திற்கு பிறகு ரஜினியை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. இதில், மணிரத்னம், மாரி செல்வராஜ் பெயர்களும் வருகின்றன. ஆனால், உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ஜெயிலர் -2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பே இன்னும் வெளிவராத நிலையில், அதன் பிறகே ரஜினியின் அடுத்தடுத்த படங்களை பற்றிய தகவல்கள் வரும் என தெரிகின்றது. இருப்பினும், ரஜினி தொடர்ந்து பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.