Suresh Kamatchi Request to Simbu Fans

ஊரடங்கு முடியட்டும் அதுவரை பொறுமையாக இருங்கள் என மாநாடு பட தயாரிப்பாளர் சிம்பு ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Suresh Kamatchi Request to Simbu Fans : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ சமீபத்தில் வெளியாக இருந்தது. ஆனால் திடீரென வெங்கட்பிரபுவின் தாயார் மரணம் அடைந்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் சிம்பு ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தற்போது யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. இதனால் தற்போதைக்கு மாநாடு சிங்கிள் ட்ராக் வேண்டாம். ஊரடங்கு முடியட்டும் அதுவரை அமைதியாக காத்திருந்திருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார் சுரேஷ் காமாட்சி.