
Supreme court – மே.தீ, அணியின் வீரர் கெய்லுக்கு, பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பிடாக வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தது.
இந்த போட்டியில் விளையாடிய மே.தீ, அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது.
இதனை தொடர்ந்து கெய்ல் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றதில் பேர்பேக்ஸ் மீடியா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெக்கல்லம் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி செய்தி உண்மை என்று நிரூபிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பு வாழ்கங்கியது.
ஆனால், இழப்பீடு தொகையின் விவரம் தெரியப்படுத்தவில்லை. எனவே அந்த வழக்கின் இழப்பீட்டு தொகையை நேற்று அறிவித்தது.
கெய்லுக்கு பேர்பேக்ஸ் குழு ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்ய போவதாக பேர்பேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.