சுந்தரா டிராவல்ஸ் 2 படம் பற்றிய முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார் நடிகர் கருணாகரன்.

Sundara Travels 2 Movie Update : தமிழ் சினிமாவில் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இந்த படத்தில் வினுசக்கரவர்த்தி, ராதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஒரு பஸ், அந்த பஸ்ஸில் இருக்கும் ஒரு எலியை வைத்து படத்தை மிகவும் கலகலப்பாக இருப்பார்கள். இன்று வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் திரைப்படமாக சுந்தரா டிராவல்ஸ் இருந்து வருகிறது.

அதே பஸ், அதே கதை.. சுந்தரா டிராவல்ஸ் 2 படம் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட நடிகர்.!!

விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. முரளி வேடத்தில் கருணாகரனும் வடிவேலு வேடத்தில் யோகி பாபு நடிக்க உள்ளனர். தற்போது கருணாகரன் அளித்த பேட்டி ஒன்றில் சுந்தரா டிராவல்ஸ் 2 படத்தை அதே இடத்தில் வைத்து எடுக்க முயற்சி செய்து வருகிறோம்.

அந்த பேருந்தை இன்னமும் உரிமையாளர் வைத்துக்கொண்டுள்ளாரா என தெரியவில்லை. ஒருவேளை அப்படியே வைத்திருந்தாலும் அந்த பஸ் எங்கள் கைக்கு வந்தால் என்ன ஆகும் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.