கடனில் சிக்கி இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இருவருக்கும் இடையே சிறப்பான டீலிங்கையும் போட்டுள்ளது.

விஜய் டிவி நட்சத்திரமாக பிரபலமான சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி ஹீரோவாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் இவரது படங்கள் எதுவும் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது மட்டுமின்றி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

கடனில் சிக்கிய சிவகார்த்திகேயன்… டீலிங்உடன் உதவி செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்!! - என்னவா இருக்கும்??

அப்படங்களில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சொந்த பணத்தில் சில படங்களை தயாரித்தார். ஆனால் அதன் மூலம் 100 கோடி வரை அவருக்கு கடன் ஏற்பட்டு விட்டது. அதனால் அவரது அடுத்தடுத்த படங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தது. தற்போது வரை கடனில் தவித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறப்பான டீலிங் போட்டு உதவி செய்ய முன்வந்துள்ளது.

கடனில் சிக்கிய சிவகார்த்திகேயன்… டீலிங்உடன் உதவி செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்!! - என்னவா இருக்கும்??

அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் உங்கள் கடன் அனைத்தையும் நாங்கள் தீர்த்து விடுகிறோம், ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் எங்கள் நிறுவனத்திற்கு மூன்று படங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயனிடம் டீலிங் பேசியுள்ளனர். அதற்கு சிவகார்த்திகேயனும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.