தமிழ்ப் புத்தாண்டான இன்று, சிம்பு வெளியிட்ட STR49 படத்தின் அப்டேட்

அனிருத் இல்லன்னா என்ன? பாத்துக்கலாம்.. என தொனியில் சிம்பு வெளியிட்டுள்ள தகவல் பற்றிப் பார்ப்போம்..
கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் 48-வது படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படத்தின் டீசரில் சிம்புவின் கெட்டப் வரவேற்பு பெற்றுள்ளது.
இதனையடுத்து, அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் படங்களிலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ராம்குமாருடன் இணையும் படத்துக்கு தற்காலிகமாக STR49 என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சித்திரை முதல் நாளான இன்று படத்தின் அப்டேட்டாக, சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை, சிம்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் கூறியிருக்கிறார். முன்னதாக, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ‘கட்சி சேர’ என்ற ஆல்பம் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் மீனாட்சி சௌத்ரியுடன் இணைந்து ஒரு ஆல்பத்தில் பணியாற்றி அதையும் ஹிட்டாக்கினார். இவர் பாடகர்களான திப்பு- ஹரிணியின் மகன் ஆவார். தற்போது சூர்யா-45 படத்தை தொடர்ந்து, அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் பான் இந்தியா படத்திற்கும் கமிட்டாக உள்ளார்.