மதராஸி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பட குழு இன்று மாலை 5 மணிக்கு ஒரு அப்டேட் வெளியாகும் என்று போஸ்டர் உடன் வெளியிட்டு இருந்தது.
அந்த வகையில் தற்போது மதராஸி படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டு உள்ளது வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#Madharasi #MadharasiFromSep5 😊👍 pic.twitter.com/qVRIFNHTUc
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 14, 2025