குஷி 2, வாலி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார் எஸ் ஜே சூர்யா.

Sj Surya About Direct Ajith and Vijay : தமிழ் சினிமாவில் இயக்குனராக பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் எஸ் ஜே சூர்யா. இவரது இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படம் அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் விஜயை வைத்து இயக்கிய குஷி திரைப்படம் விஜய் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

விஜய்க்கு குஷி 2, அஜித்துக்கு வாலி 2, ஆனால்?? எஸ் ஜே சூர்யா சொன்ன டாப்பு டக்கரு அப்டேட்

இப்படி பல வெற்றி படங்களை கொடுத்த எஸ் ஜே சூர்யா தற்போது படங்களை இயக்காமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தச் சூழலில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் குஷி 2, வாலி 2 உள்ளிட்ட படங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது ஒரு வேளை நீங்கள் படத்தை இயக்க இருந்தால் முதலில் குஷி 2 அல்லது வாலி 2 எது வரும் என கேட்கப்பட்டுள்ளது. இரண்டு படத்தையும் இயக்கும் ஐடியா இருக்கு ஆனால் கதை இன்னும் எழுதவில்லை என கூறியுள்ளார்.

விஜய்க்கு குஷி 2, அஜித்துக்கு வாலி 2, ஆனால்?? எஸ் ஜே சூர்யா சொன்ன டாப்பு டக்கரு அப்டேட்
Isai Tamil Movie Stills

எஸ் ஜே சூர்யா சொன்ன இந்த தகவலால் அஜித், விஜய் என இரண்டு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். மீண்டும் நீங்கள் படத்தை இயக்கி வெற்றி காண வேண்டும் என கூறி வருகின்றனர்.