அஜித் படம் ரிலீஸாகும் நாளில், சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ்?
‘தல’ அஜித் படம் ரிலீஸ் ஆகும் நாளில் சிவகார்த்தி படமும் ரிலீஸ் ஆகிறது?. இது குறித்த தகவல் காண்போம்.. வாங்க..
‘தல’ அஜித்தின் ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ உருவாகி வருகிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்கு பின், தற்போது குட் பேட் அக்லியை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இப்படம், கோலிவுட் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. கண்டிப்பாக ‘குட் பேட் அக்லி’ தரமான பேன் பாய் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தாண்டு மே 1 ஆம் அஜித்தின் பிறந்த நாளன்று இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே நாளில் சிவகார்த்திகேயனின் புதிய படம் ரிலீஸ் ஆகவிருப்பதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘எஸ்கே 23’ என்ற பெயரில் உருவாகி வரும் இதனை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
மேலும், ருக்மினி வசந்த், துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வால் மற்றும் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படம் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ரிலீஸ் ஆகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 23’ படம் அஜித்தின் குட் பேட் அக்லியுடன் மோத இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
ஏகே, எஸ்கே இருவரின் படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.