துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் என்று தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் H வினோத் இயக்கத்தில், தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
ஆனால் முதலில் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு பதிலாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய்குமார் இடம் தான் ஏ ஆர் முருகதாஸ் கதையை கூறி இருக்கிறார். அவருக்கு கதை பிடித்திருந்ததால் சரி என சம்மதித்த பிறகு, அக்ஷய் குமார் தொடர்ந்து படப்பிடிப்புகளில் இருந்ததால் துப்பாக்கி எடுக்க தாமதமாகி கொண்டு இருந்தது அந்த நேரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் போன் செய்து கேட்டதால் அந்த வாய்ப்பு விஜய்க்கு சென்றுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.