சமையலறையில், மனைவி ஆர்த்திக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்: எப்படி தெரியுமா?
அன்பும் அறனும் தானே நல்ல இல்லறம். சரி..இப்ப எதுக்கு இந்த குறளெல்லாம் என்கிறீர்களா? விஷயம் இருக்கு, பாருங்க..
அதாவது ‘அமரன்’ பட கெட்டப்பில் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வலைத்தளங்களில் வைரலாய் உலா வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆனது ‘அமரன்’.
கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி தனது இரண்டாவது படைப்பாக அமரனை இயக்கினார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்வியலாக வெளியாகி, தற்போதும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
‘அமரன்’ படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவரின் மனைவியாக இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர். கிட்டத்தட்ட இருவருமே தங்களின் கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளனர் எனலாம்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் ‘அமரன்’ பட இராணுவ வீரர் கெட்டப்பில், தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, தனது மனைவி ஆர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு.. அவர் கிச்சனில் இருக்கும் போது, சிவகார்த்திகேயன் ‘அமரன்’ பட இராணுவ வீரர் கெட்டப்பில் மெதுவாக அவர் பின்னாடி வந்து நிற்கிறார்.
ஆர்த்தி திடீரென திரும்பி பார்த்து சர்ப்ரைஸில் திக்குமுக்காடி போகிறார். வெட்கத்துடன் முகம் மலர்கிறார்.
இந்த க்யூட்டான வீடியோவை, சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் லவ்லியாக இருக்கிறது. ரசிகர்களின் லைக்ஸ் பெருகிப் பெருகி வைரலாய் சிறக்கிறது.