ரவிமோகன்-ஜெனிலியாவுக்கு சிவகார்த்திகேயன் கோரிக்கை..

Web Ads

சென்னையில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. தான் அடுத்தடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் என இரு அவதாரங்களை எடுத்ததைப் பற்றி அறிவித்தார் ரவி மோகன்.

யோகிபாபு நடிப்பில் ரவி இயக்கவிருக்கும் படம், ஃபேமிலி என்டர்டைனர் ஜானராக இருக்கும் என கூறப்படுகிறது. இவ்விழாவிற்கு, சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், யோகிபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகின்றார் ரவி மோகன். இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடில் நடித்து வருவதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில், ரவிமோகன் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிக்கும் படத்தில் நடிப்பீர்களா? என சிவகார்த்திகேயனிடம் கேட்டதற்கு, ‘கண்டிப்பாக அவரின் தயாரிப்பிலும் நடிப்பேன், இயக்கத்திலும் நடிப்பேன்’ என்றார். மேலும், அவர் தெரிவிக்கையில்,

Web Ad 2

‘மேடையில் ஜெனிலியா-ரவி மோஹனை பார்த்தவுடன் எனக்கு சந்தோஷ் சுப்ரமணியம் படம் தான் ஞாபகத்திற்கு வந்தது. நான் கல்லூரி படிக்கும்போது ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தை மூன்று முறைக்கு மேல் பார்த்துள்ளேன். அந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். திரும்பவும் இவர்களை ஒன்றாக மேடையில் பார்த்த பிறகு, எனக்கு நாஸ்டால்ஜிக் பீல் கிடைத்தது. எனவே, மீண்டும் இவர்கள் இணைந்து ஒரு படம் பண்ணவேண்டும் என ரவிமோகன், ஜெனிலியாவை கேட்டுக் கொள்கிறேன்’ என்றார் சிவகார்த்திகேயன்.

ரவி தயாரித்து நடிக்கும் முதல் திரைப்படம் ‘ப்ரோகோட்’ இப்படத்தை டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற காமெடி படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கவுள்ளார்.

sivakarthikeyan request to ravimohan in recent event
sivakarthikeyan request to ravimohan in recent event