நடிகர் ரவிமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்..

Web Ads

ரவிமோகன் தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும், ‘கரேத்தே பாபு’ படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார்.

இந்நிலையில், ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா மற்றும் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர்.

தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவிமோகன் வெளியிட்டார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் படம் ஒன்றை ரவிமோகன் முதல்முறையாக தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘ப்ரோகோட்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது.

Web Ad 2

இதனையடுத்து யோகிபாபு வைத்து தான் இயக்கும் படம் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் மூலம், முதல்முறையாக இயக்குநராக அவதாரம் எடுக்கிறார் ரவிமோகன். இந்த இரண்டு படங்களையும் நடிகர் சிவராஜ்குமார், நடிகை ஜெனிலியா இருவரும் கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்.

ravi mohan is set to take on the role of director
ravi mohan is set to take on the role of director