“தி வாரியர்” படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan release the trailer from “The warrior” :

தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ராம் பொத்னேனி. இவர் முதல் முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்து நடித்துள்ள படம் தான் “தி வாரியர்”. இப்படத்தை ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

"தி வாரியர்" படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ.

மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா தித்தூரி தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது படத்திற்கான டிரைலர் வெளியாகியுள்ளது.

"தி வாரியர்" படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ.

இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும்” தி வாரியர்” படத்திற்கு இயக்குனர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.