நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கும் ரீசன்டான ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்ததை தொடர்ந்து Sk21 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மிலிட்டரி ஆபீஸராக நடிக்க இருக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பு பயிற்சி மும்பையில் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ‘ நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக உங்களை ஊக்குவிப்பவர்களை நண்பர்களாகுங்கள்’. என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார் அது தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.