புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்; செம ரோலில் ஜெயம் ரவி: புறநானூறு மூவி ஸ்டார்ட்
‘அமரன்’ படத்தின் வாயிலாக புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார் சிவகார்த்தி. அதாவது, புக் மை ஷோவில் இப்படத்தின் டிக்கெட்கள் வேகமாக விற்று தீர்ந்துள்ளன. இதுவரை 4.55 மில்லியன் அமரன் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன.
அதே நேரம், விஜய்யின் கோட் படத்திற்கான டிக்கெட்கள் 4.5 மில்லியனும், ரஜினியின் வேட்டையனுக்கான டிக்கெட்டுகள் 2.7 மில்லியனும் விற்கப்பட்டுள்ளன.
இதன் மூலமாக இந்தாண்டு அதிகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்ட படமாக ‘அமரன்’ சாதனை படைத்துள்ளது. மேலும், இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 300 கோடி வசூலை குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமரனின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனையடுத்து, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 25 ஆவது படம். இப்படம் மிக ஸ்பெஷலான ஒரு படமாக ‘புறநானூறு’ அவருக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரம் கருதி சிவகார்த்திகேயனின் லுக்கை சுதா கொங்காரா டோட்டலாக மாற்றியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த தகவல் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது
சூர்யா, புறநானூறு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தபோது இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் நடிப்பதாக இருந்தனர். ஆனால், தற்போது டோடல் ஸ்டார்காஸ்ட்டும் மாறியிருப்பதாக தெரிகின்றது. துல்கர் சல்மானுக்கு பதிலாக, இப்படத்தில் நடிக்க விஷாலிடம் முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால், விஷால் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்காத நிலையில், ஜெயம் ரவி இப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. சிவகார்த்திக்கு இணையான ஒரு செம ரோலில் ஜெயம் ரவி நடிப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போல.. அமரனும், பிரதரும் செமையா கலக்குங்க.!