நான் பாவாடையா இல்லாததால், நான் சங்கியும் கிடையாது: ஆர்.ஜே. பாலாஜி

சொர்க்கவாசல், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி,
இந்த படத்தில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், இயக்குனரும் நல்ல எபெக்ட் போட்டு படத்தை எடுத்து இருக்கிறோம். இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்து, எனக்கு தேசிய விருதை பெற்றுத் தரும் என்று நான் நம்புறேன்.
பொதுவா ஒரு படத்தோட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில, அந்த படம் குறித்து, சர்ச்சையா பேசுனா. படம் வெற்றி பெரும் என்கிற ஒரு நிலைமை வந்திருக்கு. என்ன பொறுத்தவரைக்கும் ஒரு நல்ல படத்தை நாங்க கொடுத்து இருக்கிறோம். அதில், ஒவ்வொருத்தவங்களோட பார்வையும் கருத்தும் மாறுபடும்,
படத்தின் கதை நல்லா இருந்தா அந்த படத்தை யாராலும் எந்த விமர்சனத்தாலும் தடுக்க முடியாது என்பது என்னோட கருத்து. அந்த வகையில இந்த படம் நல்ல கான்செப்ட் உள்ள படம் நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும்.
இப்ப இருக்குற சூழ்நிலையில் எது பேசினாலும் பயமா இருக்கு, ஏதாவது ஒரு முத்திரையை குத்தி விடுகிறார்கள். அப்படிதான் நேத்து படத்துடன் டிரைலர் இன்னைக்கு வெளியாகிறது என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தேன். அந்த போஸ்ட்க்கு கீழ ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்து இருந்தன.
இவன் ஒரு பாவாடை, இவன் படத்தை அடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தாங்க. அந்த பாவாடைக்கான அர்த்தம் எனக்கு புரியல. அவர்கள் சொல்வது போல நான் பாவாடை கிடையாது, நான் பாவாடையா இல்லாததால், நான் சங்கியும் கிடையாது. எந்த கட்சியோட ஐடி விங்காக இருந்தாலும், உங்கள் அரசியலை நீங்க பாருங்க, எதற்காக வார வாரம் வெளியாகும் படத்தை விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அதற்காக உங்கள் அக்கவுண்டில் பணம் கிரெடிட் ஆகிறது.
அரசியல்வாதிகளுக்கு இடையே சண்டை போட்டுக்கொள்ளுங்கள், படத்தை ப்ரீயா விட்டுவிடுங்கள். ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் இப்படி எல்லா ரசிகர்களும் எல்லாருடைய படத்தையும் பார்த்து ரசிக்கலாம். அதுக்காக ஒரு படம் வெளியாகும்போது அந்த ரசிகர்கள் இவர்களின் படத்தை விமர்சிப்பதும், இந்த நடிகரின் படத்தை அந்த ரசிகர்கள் விமர்சித்து ட்ரோல் செய்வதால், எனர்ஜிதான் வீணாகிறது.
படம் நன்றாக இருந்தால் நன்றாக இருந்தது என்று சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு ஒருவரின் படத்தை டார்கெட் செய்து அடிப்பது பயமாக இருக்கிறது. ஒரு நல்ல படம் எடுத்து இருக்கிறோம் படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்க’ என பேசி உள்ளார்.
