பிக்பாஸ் நடிகரின் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sivakarthikeyan in Kavin Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் நடிகராகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்தவர் கவின். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.
மேலும் வெள்ளி திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் லிப்ட். அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிர்தா ஐயர் நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் காத்துக்கண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இப்படம் பற்றிய சூப்பரான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது கவின் உடனான நட்பு காரணமாக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.