தல அஜித்துக்கு இணையாக கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Donates to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் படு தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்றால் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அஜித்திற்கு இணையாக கொரானா நிவாரண நிதி அளித்த சிவகார்த்திகேயன் - வெளியான அதிரடி தகவல்

தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரை நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதிக்காக அளித்துள்ளார். தல அஜித்தும் ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதிக்காக அளித்திருந்த நிலையில் சிவகார்த்திகேயன் அதே தொகையை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.